Jeevan Mithran Trust
Join Hands And Be A Hero
உணவு வழங்குவோம் உயிர் காப்போம்
தினசரி உணவு வழங்கும் சேவையை கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஜீவன் மித்ரன் அறக்கட்டளை தொடர்ந்து செய்து வருகிறது. உணவே உயிர்வாழ்தலின் ஆதாரம்.
பசி ஒன்று மட்டுமே மனித இனத்தை இன்னும் செழிப்போடும்… விழிப்போம் செயல்பட வைக்கிறது.
வயிறார உணவு வழங்குவதால் பெரும்பாலான மனிதர்களின் மனங்கள் நிறைந்து அவர்களின் இயல்பான வாழ்வை வாழ துணை புரிகிறது.
நமது குறிக்கோள்
அறக்கட்டளையானது அனைத்து சமுதாய மக்களுக்காக அனைத்து பணிகளையும் அறவழியில் செய்து வருதல் திருப்பூர் வட்டம் அதைச் சுற்றி உள்ள கிராமப்புறங்களிலும் உள்ள அனைத்து இன மக்களின் வாழ்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும், உணவுகளையும் இயன்ற அளவில் செய்து தருதல் சமுதாயத்தில் அனைத்து இன மக்களிடையே ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் கட்டி காத்து வளர்த்தல், கல்விக்கூடம், சமுதாயக்கூடம் மற்றும் அறக்கட்டளைக்கு தேவையான நில ஆர்ஜிதம் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அறக்கட்டளை பெயரில் வாங்குதல், பதிவு செய்தல், தேவையான அரசு அனுமதி மற்றும் பதிவுச் சான்றுகள் பெறுதல்.
மேற்கண்ட நோக்கங்களை நிறைவேற்றாத தேவையான நிதி ஆதாரத்தை எதிர்வரும் காலத்தில் நன்கொடை, உறுப்பினர் கட்டணம் இதர சந்தாக்கள் மூலம் வசூலித்து அறக்கட்டளையை நடத்தி வர வேண்டியது.
இந்த அறக்கட்டளையை அரசியலுக்கு அப்பாற்பட்டு லாப நோக்கம் கருதாமல் மக்களின் மேம்பாட்டைக் கருதிச் செவ்வனே நடத்தி வரவேண்டியது.
இந்த அறக்கட்டளையின் நோக்கங்களையும் விதிகளையும் மனமார யேற்றுக்கொள்கிற “ஜீவன் மித்ரன் அறக்கட்டளை” மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் எதிர்வரும் காலத்தில் நிர்வாகக்குழு நிர்ணயிக்கும் தொகையைச் செலுத்தி இந்த அறக்கட்டளையின் உறுப்பினராகச் சேரத் தகுதியுடையவர் ஆவர்.
புகைப்படங்கள்
























They Need Your Help!